Friday, December 2, 2011

Ramana explains Death

அம்மாவுக்குள் என்ன நடந்தது என்பதைப் பின்னால் பகவானே சொன்னார்.
''கடந்த பல ஜென்மங்களின் வாசனைகளும் நினைவுகளும் மேலும் மேலும் பொங்கி எழுந்தன. ஆனால், அவையெல்லாம் என் கைபட்டு, உடனுக்குடன் அழிந்து விட்டன. அவள் அப்படியே சென்றிருந்தால், பல ஜென்மங்கள் எடுக்க வேண்டியிருக்கும். வாசனை களெல்லாம் ஒழிந்து, ஆழ்ந்த சாந்தி அவளை ஆட்கொண்டது. அவள் உயிர், இதயத்தில் ஒடுங்கியதன் அடையாளமாக, ஒரு சிறிய அதிர்வு ஏற்பட்டது. அது மணியோசை போல இருந்தது. ஆனால், நான் கையை எடுக்க வில்லை. முழுவதுமாக அவள் அடங்கி விட்டாள் என்று தெரிந்த பிறகுதான் கையை எடுத்தேன். ஏனெனில், முன்னர் பழனி சுவாமி யின் மூச்சடங்கும் நேரத்தில், அவர் மேல் வைத்திருந்த கையை எடுத்ததும், அவர்
உயிர் கண் வழியாக வெளியேறி விட்டது. அதனால்தான் அம்மாவின் பிராணன், இதயத்தில் முழுவதுமாக ஒடுங்கி விட்டது என்று தெரிந்த பிறகே என் கையை எடுத்தேன்'' என்று சொன்னார்.

Monday, November 7, 2011

தத்துவங்கள்

நம்பித் தான் ஆக வேண்டும்
ஒரு வண்டியைப் பார்த்தால் அதை வடிவமைத்தவன் ஒருவன் என்று நம்புகிறோம். ஆகவே, அவை தாமாகவே உண்டாகவில்லை. ஒரு உத்தேசத்தோடு ஒரு அறிவுஜீவி அதை உண்டாக்கி இருக்கிறான் என்று அறிகிறோம்.
* எதைப்பார்த்தாலும் அதைச் செய்தவன் ஒருவன் இருக்க வேண்டும். அதேபோல் தான் இந்த பிரபஞ்சத்தை செய்த ஒருவன் இருக்கிறான் என்பதை நம்பித் தான் ஆக வேண்டும். எத்தனையோ விதமான பொருட்களை ஒன்று சேர்த்து உருவாக்கி, பயனும் தருகின்ற இயற்கையை, அதற்கேற்ப அமைப்பாகச் செய்து வைத்த ஒரு மகாசக்தி அல்லது பேரறிவு இருக்கத்தானே வேண்டும்.
* வானமண்டல நட்சத்திரங்களையும், கோள்களையும், அவற்றின் சுழற்சியையும் ஏற்படுத்தியது யார்? இவை எல்லாவற்றையும் ஒரே மகாசக்தி தான் இயக்கி கொண்டிருக்க வேண்டும். ஒரே காரண காரிய விதியில் இயற்கை முழுவதும் கட்டுப்பட்டு இருப்பதால், இதை செய்தது ஒரே பேரறிவு தான் என்பதும் புரியும்.

- காஞ்சிப்பெரியவர்

Signs of Satguru

He who teaches us Veda and Vedanta or the six Shastras (systems), he who controls the breath, or brands his body with Mudras (metallic marks of Vishnu's weapons) or gives pleasing discourses regarding Brahma, he who gives mantras (sacred syllables) to the disciples and orders them to chant the same a certain number of times, but does not assure them any result in a definite time, he who by his spacious wordy knowledge explains beautifully the Ultimate Principle, but has himself got no experience or self-realization is not a Satguru.

He, who by his discourse creates in us, a distaste for the enjoyments of this world and the next, and gives us a taste of self-realization, who is well-versed in both the theoretical and practical knowledge (self-realization) deserves to be called a Satguru. How can he, who is himself devoid of self-realization, give it to the disciples?

A Satguru does not, even in his dream, expect any service or profit from his disciples. On the contrary he wishes to serve them. He does not think that he is great and the disciple small. Not only he loves him as his son but regards him as equal to himself or as Brahma. The main characteristic of a Satguru is that he is the abode of peace. He is never restless nor ruffled. He has no pride of his learning. The poor and the rich, the small and the great, are the same to him.

- chapter 48 of Sri Sai Satcharitra

என் குருநாதர் உபதேசங்கள்

























Tuesday, November 1, 2011

கரூர் சித்தர் பாலு சுவாமிகள் - Karur Siddhar Swamigal


எனது குரு பாலு சித்தர் அவர்களுக்கு எனது வணக்கங்கள். எனது குருவை கண்டவுடன்  என்னுள் மிகபெரிய மாற்றம் ஏற்பட்டது. முதலாவதாக என் மனம் குருவை தேடுவதை நிறுத்தியது. மனமானது மிகுந்த நிறைவை அடைந்தது.
அவரிடம் பேசும் போது கேட்பதற்கே ஒன்றும் இல்லாமல் போனது. கண்களில் நீர், மனதில் நிம்மதி. மனமானது அவர் பல்லாண்டு வழ பிரார்த்தித்து. பேசுவதற்கு வார்த்தைகளை தேடினேன். எந்த நினைப்பும் நீங்கி போனது. கேட்க வந்த கேள்விகள் அனைத்திற்கும் கேட்காமலேயே விடை கிடைத்தது. இவர் மகான் என்று மனம் திரும்ப திரும்ப சொன்னது. எதை கேட்டாலும் என் ஆசீர்வாதம் என்ற பதிலே அவரிடம் இருந்து வந்தது. அந்த வார்த்தையின் தீர்க்கம், அர்த்தம் அன்றுதான் விளங்கியது.

எனது பாதையில் மற்ற மகான்கள்

எனது  குருவை  தேடிய பயணம் தொடர்ந்தது. சென்னை விக்கரமன் சுவாமிகள், தவயோகி கல்லாறு தங்கராசா அடிகள் ஆகியவர்களை அறிந்தும்  என் மனமானது
என் குருவை நான் சென்றடையவில்லை என உணர்த்தியது. எனக்கு ஞானத்தை பற்றி ஒன்றும் தெரியாது. ரமண மகரிஷியை பற்றி தெரிந்தால் போதுமா? அவர்  உணர்ந்ததை நாம் உணர்ந்தால்தான் உண்மை நிலையை அறிய 
முடியும். நாம் அனைவரும் வீடு, வேலை, பிள்ளைகள் என்றிருக்க எப்படி உணருவது?   We are all getting aged very quickly.
இப்படியே போனால் இன்னொரு  பிறவி நிச்சயம். நாம் பிறப்பது நம்மை "நிறைவான" இறப்புக்கு தயார் செய்யவேயாகும். 
என்னால் ஆண்டு கணக்கில் தவம் செய்ய முடியாது. 

என் குருவால் மட்டுமே என்னை பிறவாமல் காப்பாற்ற முடியும் என்று நம்பினேன்.  எனக்கு முக்தி என்றால் பேச
மட்டுமே தெரியும். உணர்ந்தது  இல்லை. குண்டலினியை பற்றி  பேச தெரியும்.  அதை உணர்ந்தது  இல்லை. சித்தன் ஒன்றே கதி.  சித்தனை காண 
"ஓம் க்லீம் சிவாய நம" என்ற மந்திரத்தை இடை விடாது ஜபித்தேன். என் குருவை கண்டேன். என் சித்தனை கண்டேன். மனமானது ஆனந்தத்தில் மிதந்தது.   
    
.      
       

Wednesday, October 26, 2011

My First Spiritual Journey

When we get spiritually elevated to higher frequencies we can get answers to all our questions. Until then I believed I need a living guru who can guide me in the path of Gnana.
இந்த காலத்தில் உள்ள எல்லாரும் self relaisation பற்றி நிறைய பேசுகிறார்கள். In fact இப்ப உள்ள latest fashion is everyone come to US, Uk talk a lot about Self Realization. அவர்களை திரும்பி பார்த்தால் ஒன்று மட்டும் தெரியும். என்னால் பணத்தின் பின்னால் போகிறவர்களை குருவாக பார்க்க முடியவில்லை. இப்படி பட்டவர்களை Village பக்கம் போய்  அங்குள்ள மகளுக்கு ஞான மார்கத்தை, Self Realization Concept pathi சொல்லிகுடுக்க முடியாது. இவை அனைத்தும் என் கருத்துக்கள்.  தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்.  இப்படி பல குருமார்கள் foreign visits செய்யறாங்க. ஒன்று மட்டும் உண்மை. என்னை பொறுத்த வரை என் குருவை நான் கண்டவுடன் என் ஞான பாதைக்கு வழிகிட்டும் என்பதே என் கணிப்பு. Even though I am here, my search never stopped. My search resulted in a India Trip all by myself. I have to thank my husband who let me go to India in his busy schedule. I took vacation from my office and ended up there. My first meeting with a person who is identified as a siddhar by many people. I have ended up with many Miracles and experiences. Did these things helped me to get gnana or in search of my inner God? See you in my next post.

Guruvai Thedi

 சித்த குருவை தேடி அலைந்த நாட்கள்  கொஞ்சம்  நஞ்சமல்ல. 
எல்லாம்  இருந்தும்  தேடினேன்.  குருவை தேட வேண்டாம், குரு உன்னை தேடி வருவார் என்ற தத்துவம் தெரிந்தும்  பொறுக்க முடியாமல் தேடினேன். என்  தேடுதல்  பயணம்  ஆரம்பித்தது வள்ளலார்  துணையோடு தான். வள்ளலாரை அணுகி  உதவி  கோரினேன். இன்றுவரை  எமது  நட்பு  நீடிக்கின்றது. அருட்பெரும்  ஜோதி  தனி  பெரும் கருணை  என் வீடு  முழுவதும் நிரம்பியது. 
அவரை என் நண்பராக பார்த்தேன்.   அவர் சொல்படி என் வீட்டில் இருபது  நான்கு மணி நேரமும்
விளக்கு எரியும்படி வைத்துள்ளேன். அருட்பெரும் ஜோதி அகவல் நான் எப்படி பட்ட குருவை தேட வேண்டும் என்று உணர்த்தியது. இந்த  காலத்தில்  இது  எல்லாம்  சத்தியமா?  
இப்படிபட்ட குரு அமைவரா? இந்தியாவில் இருந்தால் தெரு தெருருவாக உயிரோடு உள்ள குருவை தேடலாம் திருவன்னாமலையை சுற்றி திரியலாம், 
ஆனால் அமெரிக்காவில் இருந்து எப்படி தேட போகிறோம்  என்பதே  
எனது  கவலை. நான் பெருத்த  சோதனைகளுக்கு  உள்ளாவேன்  என்று  
அப்போது   நினைக்கவில்லை. 
வள்ளலார்துணையோடு என்  பயணம் துவங்கியது..