எனது குரு பாலு சித்தர் அவர்களுக்கு எனது வணக்கங்கள். எனது குருவை கண்டவுடன் என்னுள் மிகபெரிய மாற்றம் ஏற்பட்டது. முதலாவதாக என் மனம் குருவை தேடுவதை நிறுத்தியது. மனமானது மிகுந்த நிறைவை அடைந்தது.
அவரிடம் பேசும் போது கேட்பதற்கே ஒன்றும் இல்லாமல் போனது. கண்களில் நீர், மனதில் நிம்மதி. மனமானது அவர் பல்லாண்டு வழ பிரார்த்தித்து. பேசுவதற்கு வார்த்தைகளை தேடினேன். எந்த நினைப்பும் நீங்கி போனது. கேட்க வந்த கேள்விகள் அனைத்திற்கும் கேட்காமலேயே விடை கிடைத்தது. இவர் மகான் என்று மனம் திரும்ப திரும்ப சொன்னது. எதை கேட்டாலும் என் ஆசீர்வாதம் என்ற பதிலே அவரிடம் இருந்து வந்தது. அந்த வார்த்தையின் தீர்க்கம், அர்த்தம் அன்றுதான் விளங்கியது.
No comments:
Post a Comment