Wednesday, April 25, 2012

புனித ஆறுகள்

புனித ஸ்தலங்கள், ஆறுகள் பற்றி நெறைய படித்திருகிறோம். உணரும் வரை அந்த புனித ஆறுகளை பற்றி நாம் பெரிதாக எண்ணுவதில்லை. சித்தன் அருளால் நான் கண்ட காட்சிகள் என்னை புனித நதி என்றால் என்ன என்பதை புரியவைத்தது. இது கனவல்ல. சித்தன் அருளால் கண்ட காட்சி. நான் பார்த்த பல அதிசயங்களுள் இதுவும் ஒன்று. அதிசயங்களால் நமக்கு ஒன்றும் பயன் இல்லை. அனுபவங்களை கொண்டு முக்தி அடைவதே பிறவியின் நோக்கம். அதிசயங்கள் கண்டு மயங்காமல், இன்னும் நம்மை தேளியபடுதவே ஏற்படும் Checkpoints இவை.
நான் ஈரோடு அருகில் உள்ள  கொடுமுடி கோவில் சென்றேன். அங்குள்ள காவேரியில் குளித்தபோது என் சித்தரிடம் இது புண்ணிய நதி என்றாலும் கரைபுரண்டோடும் வெள்ளத்திலும் மக்கள் செய்யும் அழுக்குகளால் குளிக்க தயக்கம் காட்டினேன். சித்தன் அருள் என் தயகத்தை போக்கி நான் கண்ட காட்சி என்னை பிரம்மிப்படைய செய்தது. அப்போதுதான் புண்ணிய நதி என்றால் என்ன என்பது விளங்கியது. நான் கண்ட காட்சி இதுவே. மக்கள், அழுக்கு கரைகள் அனைத்தும் என் கண்ணில் மறைந்தது. நான் பார்த்த காவேரி மிக ரம்யமாக துளி அழுக்கும் இல்லாமல்
Crystal Clear தன்னியக மாறியது. உள்ளே எண்ணற்ற சித்தர்கள் தவம் செய்வதை கண்டேன். எங்கும் சிவநாமம் ஒலிக்க கண்டேன். தரையில் நவமணி கற்களை கண்டேன். உள்ளே முழுகி ப்ரரர்தனை செய்தபோது காவேரி அன்னையை கண்டேன். என்னாலும் நம்பதான் முடியவில்லை. சூரிய கதிர்கள் சுற்றி இருக்க, மிக அழகிய தோற்றத்தில் அன்னை தெரிந்தாள். ஆசிர்வதித்தாள். பிரம்மிப்புடன் நான் கண்ட காட்சி கனவு என்று சொல்ல முடியாமல், நிஜம் என்பதை ஏற்கவும் முடியாமல், அந்த நிலையிலேயே கொடுமுடி ஈசனை தரிசித்த அனுபவம் இன்னும் 
நிலைத்து இருகின்றது.
.

No comments:

Post a Comment