Monday, April 23, 2012

அனுபவம்

தெரிந்த விஷயமே ஆனாலும் அதை மனம் உணரும் போது அனுபாவமாகின்றது. தெரிய வேண்டியது தெரிந்தது. மிகபெரிய பரம்பொருளாகிய சிவத்திலிருந்து 
பிறந்ததே என் ஆத்மா.  நானும் அதுவும் வேறு வேறு அல்ல. குருவானவர் வழிகாட்டி மட்டுமே. என்னிலே இருந்திருந்து நான் உணர வேண்டியது நான் சிவன் என்பதே. அதற்காகத்தான் தவமும், ப்ரனயாமங்களும்.   மந்திர உபதேசங்களும் நான் சிவன் என்பதை உணர்த்தவே. சதா சர்வ காலமும் சொல்லும் சிவநாமம் நான் சிவன் என்பதை எனக்கு உணர்தவேயன்றி முக்தி என்பது தனியாக யாரோ எனக்கு அருளும் வரமல்ல. இரவும் பகலும் சொல்லும் சிவநாமம் என்னுடைய Core DNAவில் உள்ள சிவத்தை காட்டுகிறது. நான் யார் என்பதை எனக்கு  உணர்த்துகிறது. நானும் பரம்பொருளும் ஒன்றே என்ற நிலையே முக்தியாக தெரிகிறது. இதை நான் என்னுள் இருந்து உணருகின்றேன். நான் தான் உணரவேண்டும். உணரும்போது  அணைத்து  கர்மங்களிருந்தும் விடுதலை 
கிடைகின்றது. இந்த சிவநாமம் எனக்கே.  
என்னை எனக்கு உணர்த்தவே. தன்னை உணர்ந்தவன் சிவனாகிறான். சிவனானவன் அந்த நிலையிலேயே அமர்ந்தும்விடுகிறான். இந்த உடல்தான் கருமங்களை அனுபவிக்கின்றது. ஒருவன் அனுபவத்தால் மட்டுமே முக்தி நிலையை உணரமுடியும். அப்போது ஜீவசமதியில் உள்ள சித்தர்களை நாம் ஏன் தேடிப்போகவேண்டும்? சிவவாக்கியர் சொல்வதைபோல கோவிலும் உனக்குள்ளே குளங்களும் உனக்குள்ளே என்றால் எதற்காக Positive Energy  உள்ள Vertex தேடிப்போக வேண்டும்? சித்தர்கள் சிவநிலயிலேயே நிலைத்துவிடுகிரார்கள். அவர்களிலிருந்து வெளிப்படும் Positive Energy நமது கர்மங்களை களைய உதவுகிறது. கர்மங்கள் கலையப்படும்போது மனம் அமைதி அடைகிறது. நமக்கான அன்றாட வாழ்கையின் சிரமங்கள் குறைந்து நல்ல கதி பிறக்கின்றது. இது Doctorரிடம் செல்வது போலவே அன்றி தனியாக யாரும் முக்தி அளிக்க இயலாது. அதை என்  அனுபவம் கொண்டு நான்தான் உணரவேண்டும். என் அனுபவம் அடுத்தவனுக்கு உதவாது. Everyone is Unique.


என் இன்றைய வாழ்கையின் கருமங்களிளிருந்து விடுபட மகான்களின் ஆசிர்வாதத்தை ஜீவசமாதிகளின்  மூலமாகவும், நல்வழிகள் மற்றும் கோவில்கள்
மூலமாகவும் பெற்று வாழ்கையை குறைசொல்லாமல்  இது எல்லாம் வெறும் மாயை என்ற உணர்வோடு கழிக்கவேண்டும். அதே நேரம் ஒவ்வொறு
மூச்சிலும் சிவநாமம் சொல்லி நான் சிவனே என்பதை நினைவில் கொண்டு என்னை உணர்ந்து அந்த நிலையாகிய முக்தி நிலையிலேயே நின்று எந்த ஒரு முறையும் பிறவாமை என்ற நிலையை நிலைநாட்டிடவேண்டும்.
உள்ளிருக்கும் சிவனுக்கும் என் கரும உடலுக்கும் எந்த ஒரு சம்மந்தமுமில்லை. I am responsible for my current cause and effect, why should I blame my inner sivam for that. என் உடல் நான் பண்ணும் கருமங்களை அனுபவிக்கின்றது. உள்ளிருக்கும் சிவன் என்றும் ஆனந்த நிலையிலேயே வீற்றிருகின்றது. மந்திர ஜபம் செய்யும் போது நான் என்னை உணருவதற்காக என்னக்காக செய்கின்றேன், நான் யார் என்று எனக்கு நினைவுபடுதுவதர்க்காகவே சொல்ல்கின்ரேன் என்பதை உணர்ந்து சொல்லும்போது அதன் பலன் அபரிமிதமாக தெரிகின்றது.


எப்படிப்பட்ட கொடுமையான வேதனையிலும் என்னுள் இருப்பது பரம்பொருளிலிருந்து வந்தது - நான் சிவன் என்கின்ற எண்ணமும் இந்த உடலே கருமங்களை அனுபவிக்கின்றது என்பதை நினைவில் கொள்கிறேன். அடுத்தவர் கஷ்டத்தை மூன்றாம் மனிதராக இருந்து பார்ப்பதை போல என் உடலை பார்கிறேன். சிவநிலையை உணரும் வரை இந்த உடலுக்கான கர்மங்களை ஜீவா சமாதியின் மூலம் வெளியிலிருந்து கழுவி, அதே நேரம் என்னுள் இருப்பது சிவன் இவையாவும் இதற்கு applicable ஆகாது என்று உள்ளிருந்து உணர்கிறேன். உள்ளும் புறமும் தூய்மை செய்யும்போது பிறக்கும் அனுபவமே என்னுள் ஞானமாகிறது.

No comments:

Post a Comment