முதலில் நாம் ஞானம் என்னும் கயிற்றை கொண்டு புத்தியை சமன்படுத்த வேண்டும். துணிவு என்னும் கயிற்றை கொண்டு மனத்தை சமன்படுத்த வேண்டும். அன்பு என்னும் கயிற்றை கொண்டு இதயத்தை சமன்படுத்த வேண்டும். சமர்ப்பணம் என்னும் கயிற்றை கொண்டு சரிரத்தை சமன்படுத்த வேண்டும். ஞாயம் என்னும் கயிற்றை கொண்டு ஆன்மாவை சமன்படுத்த வேண்டும். இப்படி நம்மிடம் சமப்படுத்தப்பட்ட புத்தி, மனம், இதயம், சரீரம், மற்றும் ஆன்மாவிலிருந்து பிறப்பதே "கருணை" ஆகும். இதுவே தருமம். ஒரு சாதாரண மனிதன் தரும வழி எது என்று தெரியாதபோது, அடுத்தவர் நலனை கருத்தில் கொண்டு எடுக்கும் முடிவே தருமம்மாகும்.