Thursday, January 24, 2013

ஷிர்டி சாயியும் அவரது தட்சினைகளும்

 ஷிர்டி சாயி பெரும்பான்மையான மக்களிடம் தக்க்ஷினை வாங்கும் பழக்கம் உள்ளவர். எதற்காக அவர் வாங்குகின்றார் என்பதை அவர் சரிதம் அழகாக கூறுகிறது. இது எனக்குரிய பதிலாகவே நான் கருதுகிறேன்.
எவரிடம் இருந்து நான் ஒரு ருபாய்  தக்க்ஷினையாக பெற்று கொண்டேன் என்றால் அவர்களுக்கு பத்து மடங்காக திருப்பி தர வேண்டியிருக்கிறது. நான் ஒருபோதும் எதையும் விலையில்லாமல் இலவசமாக  பெற்றுகொள்வதே இல்லை. சீர்தூக்கி பார்காது நான் யாரிடமும் தட்சிணை பெறுவது இல்லை. யாரை பக்கிரி என் அல்லா சுட்டி கான்பிக்கிறாரோ அவரிடம் இருந்து மட்டுமே கேட்கிறேன். யாரேனும் முன்பே பக்கிரியிடம் கடன்பட்டிருந்தால் அந்த கடனே திரும்ப கேட்க்கபடுகின்றது.  எதிர்காலத்தில் கணிசமாக அறுவடை செய்யவே அவர்கள் இப்போது கொடுப்பதன் மூலம் விதைகிரார்கள். தர்மத்தை செய்வதில் செல்வம் ஒருவகையாக இருக்க வேண்டும். இது  சுய இன்பத்திற்காக பயன்பட்டால் அது வீணாக்கப்படுகிறது. நீ அதை ஏற்கணவே கொடுத்தாலொழிய தற்போது அதை பெறமுடியாது. எனவே பெறுவதற்கு மிகசிறந்த வழி கொடுதலேயாகும். தக்க்ஷினை கொடுத்தல் வைராகியதையும், பற்றின்மையையும்   வளர்க்கிறது. அதன் மூலம் பக்தி ஞானம் இவற்றை விருதி செய்கிறது ஒன்றை கொடுத்து பத்தாக என்னிடம் திரும்ப பெறுங்கள்.