Wednesday, February 15, 2012

தேடல்

எதை நாம் விரும்புகின்றோம் அதையே பின்பு வெருக்கின்றோம்.  எதை நாம் வெருக்கின்றோமோ அதையே பின்பு விரும்புகின்றோம். இவை எல்லாம் தெரிந்தும் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. கடவுள்  படைத்த மாயையை வெல்ல  முடியாமல் இருக்கின்றோம். கோடியில் ஒருவரே மாயையை கடவுள் துணைகொண்டு வெல்கின்றனர். ரமண மகரிஷியை புரிந்துகொள்ள 
முடிந்ததே ஒழிய, அவர் சொல்படி எல்லாம் ஒன்றே என்ற மனநிலையை அடைய முடியவில்லை.  நான் தேடுவது நவபாஷாணம், மற்றும் சித்திகளை அல்ல. என்னுள் இருக்கும் என் சிவனையே.

Tuesday, February 14, 2012

ஸ்ரீ லிங்காஷ்டகம்

I heard it gives us peace when we do siva pooja and say this Lingastakam everyday during 4.30 -6.00pm Pradosha time.
 
ஸ்ரீ லிங்காஷ்டகம்

ஸ்ரீகணேஸாயநம:
 1 : ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்
 நிர்மல பாஸித ஸோபித லிங்கம்I
      ஜன்மஜது:க வினாஸக லிங்கம்
 தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்: பிரம்மதேவன், ஸ்ரீமஹாவிஷ்ணு, தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நிர்மலமாகவும், பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை, பிறப்பினால் ஏற்படும் துக்கத்தைப் போக்குகின்ற லிங்கமூர்த்தியை, எப்பொழுதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

2: தேவமுனிப்ரவரார்சித லிங்கம்
 காமதஹம்கருணாகர லிங்கம்I
    ராவணதர்ப்ப வினாஸன லிங்கம்
 தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்: தேவர்களாலும் சிறந்த முனிவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, மன்மதனை பஸ்மமாகச் செய்தவரும், கருணையைச் செய்யும் லிங்க மூர்த்தியை, ராவணனுடைய கர்வத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

3: ஸர்வஸுகந்திஸுலேபித லிங்கம்
 புத்திவிவர்த்தனகாரண லிங்கம்I
    ஸித்தஸுராஸுரவந்தித லிங்கம்
 தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்: எல்லாவித வாசனை திரவியங்களாலும், பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, புத்தியை விருத்தி செய்வதற்கு காரணமான லிங்க மூர்த்தியை, ஸித்தர்கள், தேவர்கள் அஸுரர்கள் முதலியவர்களால் பூஜிக்கப்பட்ட எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

 4 : கனகமஹாமணிபூஷித லிங்கம்
 பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்I
      தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
 தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்: தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்க்ப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷயாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

5: குங்குமசந்தனலேபித லிங்கம்
 பங்கஜஹாரஸுஸோபித லிங்கம்I
    ஸஞ்சிதபாபவினாஸன லிங்கம்
 தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்: குங்குமம், சந்தனம் இவைகளால் பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, தாமரை புஷ்பங்களாலான மாலைகளால் விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, குவிக்கப்பட்ட பாபங்களை நாசமாக்குகிற லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

 6: தேவகணார்ச்சிதஸேவித லிங்கம்
 பாவைர்பக்திபிரேவச லிங்கம்I
    தினகரகோடிப்ரபாகர லிங்கம்
 தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்: தேவகணங்களால் அர்ச்சிக்கப்பட்டதுடன், ஸேவிக்கப்பட்டதுமான லிங்க மூர்த்தியை, நல்ல எண்ணங்களாலும் பக்தியாலும் ஸேவிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை  நமஸ்கரிக்கிறேன்.

 7: அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
 ஸர்வஸமுத்பவகாரண லிங்கம்I
    அஷ்டதரித்ரவினாஸித லிங்கம்
 தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்: எட்டு தளங்கள் உள்ள ஆஸனத்தில் அமர்ந்த லிங்க மூர்த்தியை, எல்லா வஸ்துக்களின் உற்பத்திக்கும் காரணமான லிங்க மூர்த்தியை, எட்டுவித தரித்திரங்களையும் நாசம் செய்யும் லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை  நமஸ்கரிக்கிறேன்.

 8: ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
 ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்I
    பராத்பரம் பரமாத்மக லிங்கம்
 தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்: ப்ருகஸ்பதியினாலும், இந்திரனாலும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியும், இந்திரனுடைய தோட்டத்திலிருந்து கொண்டு வந்த புஷ்பத்தினால் எப்போதும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, ப்ரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்ட பரமாத்ம ஸ்வரூபியான லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை  நமஸ்கரிக்கிறேன்.

லிங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேச்சிவஸன்னிதௌ
ஸிவலோகமவாப்னோதி ஸிவேன ஸஹ மோததேII

Friday, February 10, 2012

ஷீரடியின் அற்புதங்கள்

சித்தர்களை வணங்குபவர்களுக்கு அற்புதங்கள் நடந்துகொண்டுதான் இருகின்றன. நம்மால்தான் உணரமுடியவில்லை. என் குருவின் சொல்படி  ஒவ்வொரு வியாழகிழமையும் எதாவது ஒரு சித்தர் இடத்தை தரிசனம் செய்து அன்னதானம் செய்து கொண்டிருக்கிறேன். இந்தியாவாக இருந்திருந்தால் வெவ்வேறு சித்தர்கள் இடத்தை தரிசனம் செய்து இருப்பேன். அதிர்ஷ்டவசமாக நான் இருக்கும் இடத்தில் ஷீரடி சாய் கோவில் உள்ளது. எல்லா சித்தர்களுமே ஒன்றுதான். நான் ஒவ்வொரு வியாழகிழமையும் ஷீரடி சாயை என் குடும்பத்துடன் சென்று வழிபடுவேன். என் குழந்தைகளுக்கும் இந்திய கலாச்சாரத்தை காண்பிக்கும் திருப்தியும் எங்களுக்கு கிடைக்கும். என் கணவருக்கு Suddenly Department Change ஏற்பட்டது. He was not happy about it. He was not in a normal mood that day. எனினும் அவர் ஷீரடியை தரிசிக்க தவறவில்லை. நான் அவரிடம், என்னிடம் சொல்லவதை இவரிடம் சொல்லு என்றேன். அடுத்த வியாழகிழமை மிகுந்த மனதிருப்தியுடன் ஆபீஸ்இல் இருந்து வந்தார். They transferred him back to the same department again. இதுதான் சித்தர்களின் தரிசனத்தின் அற்புதங்கள். நம் வாழ்கையின் சில கர்மாக்களை அனுபவிக்கவிட்டு பெரிய கர்மாக்களை தடுத்து நிறுத்தும் சக்தி தான்  இவர்களின் பெரிய கருணை.

Thursday, February 9, 2012

மந்திரம்

என் குரு ஒரு விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர். அவர் உபதேசித்த மந்திரத்தை இடைவிடாது ஜபிக்க சொல்லுவார். அதுவே முக்திக்கு வழி என்பார். பட்டினத்தாரும், கருவுராரும் அவருக்கு உபதேசித்த மந்திரம் இது என்பார். 
Bottomline, every guru will advice you to continuosly say God name to get rid of Karmas. அன்னை சாரதா தேவியின் வாக்கு என்னை தெளியப்படுதியது. ஒரு பெண்ணாக இருந்து இல்லற கடமை முடித்து தியானம் செய்வது மிகவும் கடினமாக இருந்தபோது, she says, I will do everything to Ramakrishnar and end up in meditative state when I sleep at night. இது ஒரு வித யோக நித்திரை. From this I learned, we cannot say excuses for not saying god's name every minute or doing regular meditation. Here is my technique
1. Practice your mind to say your Guru initiated Mantra every breath.
2. I fix my thought in front of Lord Shiva and order my mind to continuosly chant the Mantra until I finish my worldly duties. In the middle of your work check where is your soul, you can feel it is sitting infront of lord shiva and continuosly chanting the Guru Mantra. This is a very effective day time meditation to me.
3. Remember Ragavendrar vakku 'இதுவும்  கடந்து  போகும்" - think of this verbiage when you are in parties, entertainment areas,..you can see life is nothing and you need to prepare yourself for your endjourney.
Every minute I have to prepare my soul for the death. At time comes, my Soul should know how to merge with the Oneness of shiva. If possible, watch Ramana Maharshi's final death moment video in the youtube. அவர் உடம்பு வலியால் துடிக்கும் போதும், அவர் கண்கள் இறையோடு ஒன்றி இருக்கும்.  

யோக மாயை

We all know everyone in spiritual line will face different experiences..ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், நாம் யோக மாயையை சந்திக்கின்ரோம்.  I have faced this experience many times. Whenever I get into deep meditative state, I feel lot of fragrances around me. This continued even at regular times. Whenever I see any Mahangal photos, thiruvannamalai photos, I get the fragrance right away. I am so used with this fragrances. Also, whenever I talk to my Siddhar Guru, he emits lot of fragrances that spreads all over my pooja room. So my internal heart thought when I think of Guru, I need to get fragrance this way I can identify if my prayers are answered. Since I got stuck with my new responsibilities at work, I didnt have enough time to focus on my Godly things, I lost my track. When I realized that I came back to meditation, I didnt get that fragrance. I looked at the game of the Maya. Maya strongly turns my mind to sense for the fragrance more and diverts me from focusing God. My inner guidance helped me to get rid of this yoga mayai and focus on God through a simple practice. This really helped me to avoid my egos that I come across in my paths..
என்னை பொறுத்தவரை எல்லா சித்தர்களுமே ஒன்றுதான். ரமணரிடம் கேட்கும் கேள்விக்கான பதில் ஷீரடி சாயீடமும், ஷீரடியிடம் கேட்கும் விஷயம் என் குருவின்மூலமாகவும் தெரியவரும். I used to stare at ramanar, he is the one who gave me an answer through my mind. He teached me a mind technique.  This really works well for me. நான் கற்ற Reikhi முறையும் இதை கூறுகிறது. Before we start our Reiki to absorb cosmic energy, we will do a prayer. The prayer will ask only good cosmic energy only to be passed through our hands and that cosmic energy should come from our Gurus, Siddhars, and guardian angles only. சித்தனீடம் வேண்டும்போது நீயே நான், நானே நீ என்று தான் நான் வேண்டுவேன்..என்னுள் இருந்து என்னை வழினடதுவயாக, என்னுள் இருக்கும் என் சிவனை எனக்கு உணர்துவாயாக என்று மனதார வேண்டுவேன்.

Wednesday, February 8, 2012

மகான்களின் கணிப்பு

மடாதிபதிகள் தங்களின் மட வாரிசாக அடுத்தவரை நியமிக்கும் வழக்கம் நமது இந்து மதத்தில் உண்டு. அப்படிஇருக்க, ஞானிகளின் கணிப்புகூட தவறாகுமா?  எனக்கு காஞ்சி பெரியவர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. அவர் பூமியில் வாழ்ந்த மிக எளிமையான மகான். அவரால், அவரின் தீர்கதால் வந்தவர்கள் இப்போது இருக்கும் சுவாமிகள். அப்படி இருக்க, ஏன் அவர்கள் பல விஷயங்களை சந்திக்கின்றனர்? இவையெல்லாம் பெரியவருக்கு தீர்க்தால் உணரபப்பட்டதா? எதனால் நிறைய மகான்கள் தங்களின் வாரிசுகளாக யாரையும் உருவாக்கவில்லை? ஊதாரணமாக- ஷீரடி சாய், ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார். தெரிந்தவர்கள் தெரியபடுத்தவும்.